இந்­திய மத்­திய அரசின் உயர் மட்ட குழு­வினர் ஆகஸ்டில் இலங்கை வருகை

279

இந்­திய மத்­திய அரசின் உயர் மட்ட குழு­வினர் ஆகஸ்ட் மாதம் 10 மாதம் திகதி இலங்­கைக்கு வரு­கின்­றனர்.

அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்ட குழு­வினர் மூன்று நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருப்­ப­துடன் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ளனர்.

ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்­கி­லேயே தகவல் தொழில்­நுட்ப, உள்­ளூராட்சி நிர்­வாகம் மற்றும் நகர அபி­வி­ருத்தி மத்­தி­ய­மைச்சர் கே.டி. ராமா ராஹோ தலை­மை­யி­லான குழு­வினர் இலங்கை வரு­கின்­றனர்.

உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி மற்றும் சர்­வ­தேச தொழி­லாளர் அமைப்­புடன் இணைந்து அர­சாங்கம் மனித வள உச்சி மாநாட்­டினை ஏற்­பாடு செய்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் உலக வங்­கியின் பணிப்­பாளர் கலா­நிதி அமிட் றோர் ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்­ளனர்.

இலங்கை – இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவில் தீர்­மா­னிக்­கப்­பட்ட உத்­தேச பொரு­ளா­தாரம் மற்றும் தொழில்­நுட்ப கூட்டு ஒப்­பந்தம் குறித்து இந்­திய மத்­தி­ய­ரசின் உயர் மட்ட குழுவினர் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.in

SHARE