இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

107

 

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1997ல் வெளிவந்த திரைப்படம் இந்தியன்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார்கள். முதலில் இந்தியன் 2 என திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இந்தியன் 3 படம் கூட தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்தியன் இன்ட்ரோ
இந்நிலையில், இந்தியன் 2 படத்திலிருந்து இந்தியன் இன்ட்ரோ வீடியோ வருகிற நவம்பர் 3ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் இந்தியன் இன்ட்ரோ வீடியோவை பார்க்க தற்போதே ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இந்தியன் இன்ட்ரோ எப்படி இருக்க போகிறது என்று.

SHARE