இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது-மோடிக்கு கைகுலுக்கிய யாழ் இளைஞனின் பின்னனி.

303

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான பாதுகாப்பு ஒழுங்கீனமாக இந்தச் சம்பவத்தை இந்திய அரசு நோக்குவதாகவும், அதனாலேயே இது தொடர்பில் முழு மையான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் அலுவலக செயலகம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சனிக்கிழமை கீரிமலைக்கு வீடு கையளிப்புக்காக வந்திருந்தார். இதன் போது அவர் நிகழ்வு முடித்து வெளியேறுகையில், ராஜரட்டைப் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவனான திரவியச்செல்வம் சிறீறஜீவன் (வயது26) பிரதமர் மோடியுடன் கைலாகு கொடுத்திருந்தார்.

இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு வலயத்தை மீறி குறித்த மாணவன் உள்நுழைந்து கைலாகு தொடர்பிலேயே தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமருடன் கைலாகுவின் பின்னர், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இளைஞனைக் கைது செய்து, இளவாலைப் பொலிஸாரிடம் கையளித்திருந்தனர். குறித்த இளைஞன் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்றுவருகின்றது.

இந்த நிலையில், மேற்படி சம்பவத்தை மோசமான பாதுகாப்புக் குறைபாடாக எடுத்துக் கொண்டுள்ள, இந்தியப் பிரதமர் செயலகம், உடனடியாக உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் செயலகத்தின் மேற் பார்வையின் கீழ் நடைபெறும் இந்த விசாரணையை, வெளிவிவகார அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகிறது.

சிறிறஜீவன் என்னும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் தனது பிரபலத்திற்காக இவ்வாறான செயற்பாடுகளைச் செய்து வருவதாக அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.Jaffna Boy 01Jaffna Boy 02Jaffna Boy 03Jaffna Boy

 

 

2

 

 

1

 

 

0

 

 

 

3288

 

 

SHARE