இந்தியாவினால் லச்சங்களை அள்ளிய யாழ். மாநகரசபை – வாகீசன்

223

14658165_556980204494395_520078763_n
பாலசுப்பிரமணியத்தின்  யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  வருமானம் சுமார் 8 லட்சம் ரூபா வருமாணம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் ஆகியோரின்   யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் சுமார் 8 லட்சம் ரூபா வருமாணம் கிடைத்துள்ளது.
மேற்படி மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற கலியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்தியதற்கான 3 நாட்களிற்கான வாடகை நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.
இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. எனவும் சுட்டிக்காட்டினார்
SHARE