இந்தியாவின் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள்

216

இந்தியாவின் தமிழகத்திலிருந்து 54 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அதன்படி இவர்கள் இன்றும் நாளைமறுதினமும் நாடு திரும்பவுள்ளனர்.

விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளதுடன், இவர்கள் இவர்களது சொந்த இடமான  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயெ மீள குடியமர்த்ப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

SHARE