இந்தியாவின் தோல்விக்கான சில முக்கிய காரணிகள்

130

உலகக் கிண்ண தொடரில் தோல்வியை சந்திக்காமல் வந்த இந்தியா, இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அதற்கான முக்கிய காரணங்களை பார்ப்போம்.

1. சுப்மன் கில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தது,

இந்த தொடரில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, அவருக்கு துணையாக சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் ஸ்டார்க் பந்தில் தேவையில்லாமல் ஆஃப் சைடு வந்த பந்தை லெக்சைடு தூக்கி அடிக்க முயற்சி செய்து, மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்தார். அவர் 5 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, விராட் கோலி உடனடியாக வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா 10 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் ஐய்யரும் விரைவாக களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுப்மன் கில் சுமார் 10 ஓவரை வரையாவது நிலைத்து நின்றிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்திருக்கும்.

2. மிடில் ஓவரில் தடுமாறிய ஸ்கோர்,

10.3 ஆவது ஓவரில் விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ஆவது ஓவரில் இருந்து 20 ஓவர் வரை இந்தியாவுக்கு 35 ஓட்டங்கள், 21 ஆவது ஓவரில் இருந்து 30 ஆவது ஓவர் வரை 37 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஆவது ஓவருக்குப் பிறகு 4 பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தது.

3 சூர்யகுமார் யாதவை பின்னால் வைத்தது,

விராட் கோலி 63 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது, சூர்யகுமாருக்கு பதிலாக ஜடேஜா களம் இறக்கப்பட்டார். ஜடேஜாவால் 22 பந்தில் 9 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஒருவேளை கே.எல். ராகுல் உடன் ஜோடி சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால், அவரால் அதிரடியாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. என்றபோதிலும், போட்டி முடிவடைவதற்கு 15 பந்துகளுக்கு முன்னதாக 28 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்டார். கடைசி வரை நின்றிருந்தால் கூடுதல் ஓட்டங்கள் வந்திருக்கலாம்

4. முகமது சிராஜிக்கு புதிய பந்தில் பந்து வீச வாய்ப்பு வழங்காதது,

தொடர் முழுவதும் பும்ரா உடன் முகமது சிராஜ் புது பந்தில் பந்து வீசி வந்தார். இந்த போட்டியில் பும்ரா உடன் முகமது சமி பந்து வீசினார். இந்தியா 3 விக்கெட்டுகள் தொடக்கத்தில் வீழ்த்தியது. என்றாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய நிலையில், முகமது சிராஜால் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவர் புதுப்பந்தில் சிறப்பாகத்தான் பந்து வீசி வந்தார். இதுவும் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது எனலாம்.

5. ஆக்ரோசமான தாக்குதல் இல்லாமல் போனது

எப்போதும் துடிப்புடன் விளையாடும் இந்திய அணி ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியாவை 47 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது. அதன்பின் டிராவிஸ் ஹெட் (137) லபுஷேன் (58*) ஆகியோரை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டனர். இவர்கள் 192 ஓட்டங்கள் குவித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துவிட்டது. – ada derana

SHARE