திரையுலகை நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து நம்முடைய சினிஉலகத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறோம்.
நடிகர் பிரம்மானந்தம்
அந்த வரிசையில் இன்று தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவானாக இருக்கும் நடிகர் பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு குறித்து விவரம் தான் பார்க்கவிருக்கிறோம்.
இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட, தமிழ், கன்னடம் என கிட்டதட்ட 1000 படங்களுக்கும் மேல் தனது திரை வாழ்க்கையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 67 வயதாகும் நடிகர் பிரம்மானந்தம் தற்போது மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1987ல் தனது திரை பயணத்தை துவங்கிய நடிகர் பிரம்மானந்தம் இன்று வரை பிசியாக வலம் வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், மூத்த நடிகர் பிரம்மானந்ததின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 490 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தான் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.