இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

145

இந்தியாவிற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வருகிற வெள்ளிக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த போட்டியில் விளையாடாத கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஓய்வு முடிவை அறிவித்துள்ள அலெஸ்டர் குக்கிற்கு இது கடைசி போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணி விபரம்
  1. ஜோ ரூட்
  2. மொயீன் அலி
  3. ஆண்டர்சன்
  4. பேர்ஸ்டோவ்
  5. ஸ்டூவர்ட் பிராட்
  6. ஜோஸ் பட்லர்
  7. அலெஸ்டர் குக்
  8. சாம் குர்ரன்
  9. ஜென்னிங்க்ஸ்
  10. போப்
  11. கிறிஸ் வோக்ஸ்
  12. பென் ஸ்டோக்ஸ்
  13. அடில் ரஷித்
SHARE