இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

178

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்து உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலைப் போல, மற்றுமொரு தாக்குதலை காஷ்மீரில் அரங்கேற்ற, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன.

SHARE