இந்தியாவுக்காக நீங்கள் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது விருந்தாக இருந்தது: சாய் சுதர்சனை பாராட்டிய தமிழக வீரர்

128

 

அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய தமிழக வீரர் சாய் சுதர்சனை, சக அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் பாராட்டியுள்ளார்.

அறிமுகப் போட்டியில் அரைசதம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 55 (43) ஓட்டங்கள் விளாசினார்.

இந்த நிலையில் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசிய அவரை வாஷிங்டன் சுந்தர் பாராட்டியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் உங்களை முதன் முதலில் பள்ளிப் போட்டியில் பார்த்தது இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. நீங்கள் இப்போது இருப்பதை விட பாதி அளவில் இருந்தீர்கள், ஹாஹா! நீங்கள் மிகவும் கிளாஸாக இந்திய அணிக்கு அன்றுபோல் பேட்டிங் செய்து எளிதாக்கியதை பார்ப்பது ஒரு விருந்தாக இருந்தது! இந்திய அணியில் உங்கள் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சாய்!’ என தெரிவித்துள்ளார்.

சாய் சுதர்சன் 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 4 அரைசதங்களுடன் 507 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE