இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வாட்சன், ஸ்டார்க் நீக்கம்.. அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

324
இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடர் எதிர்வரும் 12ம் திகதி பெர்த்தில் தொடங்குகிறது. அதேபோல் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் புதுமுக வீரர்கள் ஸ்காட்போலண்ட், ஜோயல் பேரிஸ் இடம் பெற்றுள்ளனர். கானே ரிச்சர்ட்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் பல்க்னெர், ஹாசல்வுட் மற்றும் ஷான்மார்ஷ் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

வாட்சன், ஜோபர்ன்ஸ், ஆஸ்டன் ஆகர், ஹாஸ்டிங்ஸ், ஸ்டார்க், கும்மின்ஸ், பேட்டின்சன், நாதன் கோல்ட்டர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

ஸ்டீவ் சுமித் (அணித்தலைவர்), டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், பெய்லி, மேக்ஸ்வெல், மிட்சேல் மார்ஷ், மேத்யூ வாடே, பல்க்னெர், கானே ரிச்சர்ட்சன், ஹாசல்வுட், ஸ்காட்போலண்ட், ஜோயல் பேரிஸ்.

SHARE