இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதில் எவ்வித முரண்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு தடவையும் இரு நாடுகளினதும் கடற்படையினரும், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரும் கூட்டங்களை நடத்துவதாகவும் இது கூட்டு ரோந்து பணிகளுக்கு நிகரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கண்காணிப்பு நடாத்துவது குறித்து முன்னதாகவே யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என குறிப்பிடப்படுகிறது.