நீரை சுத்திகரிக்கும் வில்லைகளை ஜப்பானும் இந்தியாவும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவியாக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் சர்வதேச கூட்டிணைவு நிறுவனமான ஜெய்க்கா, போர்வைகள், பிளாஸ்டிக் விரிப்புக்கள் தண்ணீர் தாங்கிகள், உட்பட்ட பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த பொருட்களுடன் ஜப்பானின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஒன்றும் இலங்கை வந்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் சி 17 விமானம் படுக்கை விரிப்புக்கள், நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் உட்பட்ட பல பொருட்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது.
இதனை தவிர இந்தியாவின் இரண்டு கப்பல்களும் அவசர உதவிகளை தாங்கி இலங்கைக்கு வந்துள்ளன என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.