இந்தியாவை எச்சரிக்கும் அருட்தந்தை ஜெபரட்ணம்

159

கச்சதீவில் ஆலயம் கட்டுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார்.

144997480512193824_825456284240162_7245371154057922640_n

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், அனுமதியுடனும் கச்சதீவில் தேவாலயம் கட்டப்படுவது தொடர்பாக அருட்தந்தை குறிப்பிட்டார்.

கச்சதீவில் தேவாலயம் கட்டப்படுவது தொடர்பாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் அருட்தந்தை இவ்வாறு குறிப்பிட்டார்.

கச்சதீவு ஒப்பந்தத்தின்படி கிறிஸ்தவ தேவாயம் மாத்திரம் அப்பகுதியில் கட்ட முடியும் எனவும் அருட்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தின்படி தற்போது கச்கதீவு அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்டத்தின் நிர்வாகத்திலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய அருட்தந்தை, குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என தெரிவித்தார்.

எனினும் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்துவருவதாக குறிப்பிட்ட அருட்தந்தை, எதிர்வரும் திருவிழாவிற்கு முன்னர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.nave

SHARE