ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 79 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசி டெஸ்ட் தற்போது சிட்னியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.
அதிலும் ஒரு ரேட்டிங் புள்ளி மட்டுமே அதிகமாக பெற்று அவுஸ்திரேலியா (118) முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 117 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்தவரை, 27 போட்டிகளில் விளையாடி 79 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளதால் 7வது இடத்தையே பிடித்துள்ளது.
டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்:
அவுஸ்திரேலியா (118)
இந்தியா (117)
இங்கிலாந்து (115)
தென் ஆப்பிரிக்கா (106)
நியூசிலாந்து (95)
பாகிஸ்தான் (92)
இலங்கை (79)
மேற்கிந்திய தீவுகள் (77)
வங்கதேசம் (51)
ஜிம்பாப்பே (32)