இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட்: அணியில் 3 முக்கிய மாற்றங்கள் செய்த ரோகித் சர்மா

120

 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெறும் நிலையில் அணியில் 3 முக்கிய மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

3 முக்கிய மாற்றங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக யார் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக முன்னாள் இந்திய வீரரான ஜாகீர் கான் அறிமுக வீரரான ரஜத் பட்டிதருக்கு டெஸ்ட் கேப் வழங்கினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிறகு அணியின் மாற்றம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, காயம் காரணமாக வெளியேறிய ஜடேஜா மற்றும் கே.எல் ராகுலுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் மற்றும் ரஜத் பட்டிதர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் சிராஜுக்கு மாற்றாக முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் ரோகித் சர்மா தெரிவித்தார்.

SHARE