இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணியை பொறுத்த வரையில் டெஸ்ட் போட்டிகளில் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதால் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஒரு நாள் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைப்பது சாத்தியமில்லை.
மேலும் மேற்கிந்திய தீவுகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் 2 அல்லது 3 சுழற்பந்து வீச்சாளர்களை சேர்ப்பதா என்பது இந்திய அணி நிர்வாகம் விவாதித்து வருகிறது.
இந்திய அணி துடுப்பாட்டக்காரர்களை பொறுத்த வரையில் பொறுமையாக விளையாடுவதே சிறந்ததாகும்.
அணியின் துவக்க துடுப்பாட்டக்காரர்கள் நல்ல துவக்கம் கொடுத்தால் அதிக ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவு அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை தான் இந்திய அணி நம்பி இருக்கிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர்.
கடந்து 2002 க்கு பிறகு மேற்கிந்திய தீவு அணி டெஸ்ட் போட்டிகளில் பல அணிகளை வென்றுள்ளது இந்திய அணி தவிர.
2002 க்கு பிறகு மேற்கிந்திய தீவு அணி இந்தியாவுடன் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 தோல்வி,7 ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
மேலும் 2006 மற்றும் 2011 ம் ஆண்டில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் தொடரை வென்றுள்ளது.
அதைதொடர்ந்து கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடரை வென்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்று இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முரளிவிஜய், ஷிகர் தவான், விராட் கோலி (தலைவர்), புஜாரா அல்லது லோகேஷ் ராகுல், ரஹானே, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, அமித் மிஸ்ரா அல்லது ஸ்டூவர்ட் பின்னி அல்லது உமேஷ் யாதவ்.
டேரன் பிராவோ, கிரேக் பிராத்வெய்ட், சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட் அல்லது லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கார்லஸ் பிராத்வெய்ட், ஜாசன் ஹோல்டர் (தலைவர்), தேவேந்திர பிஷூ, கேப்ரியல், மிக்யூல் கம்மின்ஸ், ராஜேந்திர சந்திரிகா.