இந்தியில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே

283
இந்தியில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே படக்குழு
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.
இதனிடையே, இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இதன் தெலுங்கு பதிப்பையும் அஷ்வத்தே இயக்க உள்ளார்.
ஓ மை கடவுளே படக்குழுஅடுத்தபடியாக  ‘ஓ மை கடவுளே’ படம் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது, “நான் தற்போது ‘ஓ மை கடவுளே’ தெலுங்கு ரீமேக் பணிகளை செய்து  வருகிறேன். மேலும், இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருகிறது. இவை இரண்டும் தவிர்த்து தமிழில் அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
SHARE