
யுத்தம் காரணமாக இந்தியா சென்று அங்கு அகதி முகாம்களில் இருக்கும் அகதிகளை நாட்டிற்கு திருப்பி அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய அகதிமுகாம்களில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகாமான அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 5,000 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்தார்.