இந்திய அணிக்கு ஒரு வரலாற்று சாதனை வெயிட்டிங்! அது என்ன தெரியுமா?

224

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறது.

நியூசிலாந்து அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் எதிர்வரும் 16ம் திகதி நடக்கிறது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு 900வது ஒருநாள் போட்டியாகும்.

இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 900வது ஒருநாள் போட்டியை விளையாடும் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.

இந்தியா லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 1974ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது.

இதுவரை 899 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 454 போட்டிகளில் வெற்றி, 399 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது. இதில் 7 போட்டி டிரா ஆகியுள்ளது. 39 போட்டிக்கு முடிவு தெரியவில்லை.

SHARE