இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம். கோஹ்லிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

251

625-500-560-350-160-300-053-800-748-160-70-12

இந்திய அணிக்கான நம்பர் 1 கேடயத்தை விராட் கோஹ்லிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணியிடம் இருந்த நம்பர் 1 இடத்தை இந்திய அணி பறித்தது.

ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் ICC வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பை ICC தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணி தொடர் முடிந்தவுடன் அறிவிக்க உள்ளது.

இதனால் நம்பர் 1 இடத்தை பிடித்தற்கான கேடயத்தை ICC இந்திய அணிக்கு அளிக்க உள்ளது.

ஆனால் இக்கேடயத்தை தற்போது இந்தூரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படி கவாஸ்கர் இந்திய அணிக்கான நம்பர் 1 கேடயத்தை வழங்கினால் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்றும், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட்கோஹ்லிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் கூறப்படுகிறது.

SHARE