இந்திய அணியின் தலைமையில் மாற்றம்

143

இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் நவம்பர் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டி20 அணித்தலைவராக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.

உலகக் கிண்ணத் தொடரின்போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ருதுராஜ் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொறுப்பு சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), ருத்துராஜ் (துணைத் தலைவர்), இஷான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசாத் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.

SHARE