இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து ஏகப்பட்ட சிக்கல்கள் – யுவராஜ் சிங்

148

2011 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற போது இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் மிடில் ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ், ரெய்னா, யூசுப் பதான், விராட் கோலி, தோனி என்று ஒரு பெரும்படையே இருந்தது. யுவராஜ் தன் சகலத்துறை திறமையினால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய மண்ணில் ஐசிசி உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் உண்மையான பிரச்சினையை யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் மேலும் தெரிவிக்கையில், தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தால், மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்களை கட்டமைக்க வேண்டும். துடுப்பாட்ட வீரர்களை சும்மா ஸ்ட்ரோக் மேக்கர்களாக ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று அடித்து ஆடவும் செய்ய வேண்டும் என்பது சரியல்ல.

தொடக்க வீரர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டரில் இறங்குபவர் அழுத்தத்தை தனக்குள் வைத்து சில பந்துகளை ஆடாமல் விடுத்து கூட்டணியை அமைக்க வேண்டும். இது கடினமான காரியம். இதற்கு அங்கு அனுபவஸ்தர்கள் தேவை.

நான் ஒரு இந்தியன் என்பதால் இந்தியா தான் உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று கூறலாம். ஆனால் இந்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன.

இந்த சிக்கல்கள் களையப்படாவிட்டால் நிச்சயம் இந்திய அணி தடுமாறும். இந்திய மிடில் ஆர்டரின் பெரிய பிரச்சனை வீரர்களின் காயங்கள். அழுத்தம் அதிகமான ஆட்டங்களில் நாம் சோதனைகள் மேற்கொள்ளுதல் கூடாது.

ஒரு தொடக்க ஆட்டக்காரருக்கான திறமை வேறு மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரர் திறமை வேறு. இங்கு தான் இந்திய அணியில் பிரச்சனைகள் இருக்கின்றன.

மிடில் ஆர்டரில் யார் யார் ஆடப்போகிறார்கள், அவர்களுடன் யார் பணியாற்றுகிறார்கள்? இதுதான் கேள்வி. மிடில் ஆர்டர் இன்னும் தயாராகவே இல்லை. எனவே யாராவது அவர்களைத் தயார் செய்ய வேண்டும்” என தெரிவித்தார் யுவராஜ் சிங்.

SHARE