இந்திய அணியில் இது மட்டும் இல்லையே. வருந்தும் பிரட் லீ

218

இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 150கி.மீற்றர் வேகத்திற்கு பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது வருத்தமளிப்பதாக பிரட் லீ தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் போட்டிகளுக்காக இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ அது முடிவற்ற நிலையில் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் வலுசேர்க்கும். இதன் மூலம் நம் மனது பலப்படுவதுடன், விளையாட்டில் சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கிரிக்கெட்டில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் உடற்பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் அதிவேகமாக பந்து வீச மூடியும்.

அதற்காக வீரர்கள் யாரும் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என நான் கூறவில்லை, அதுவும் தேவை, இதுவும் தேவை என கூறினார்.

மேலும் இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 150 கி.மீற்றர் வேகத்திற்கு பந்து வீசுவதற்கு தற்போது யாரும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது எனவும், அடுத்து வரும் காலங்களில் இதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE