இந்திய அணியின் இளம் வீரரான கருண்நாயன் நான் தான் கோஹ்லியை விட பிட்டான நபர் என்று கூறியுள்ளார்.
ஆசியகோப்பை தொடர் முடிவு பெற்ற நிலையில், இந்திய அணி, மேற்கிந்திய தீவு அணியுடன் 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியானது. அதில் முரளி விஜய் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, கருண் நாயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பும்ரா, புவனேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தில் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான கருண்நாயர், இந்திய அணியின் மிகவும் பிட்டான பிளேயர் நான் தான், எங்களது பயிற்சியாளர் ஷங்கர் பாஸு, பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் ஆகியோரிடம் நான் அதிக நேரம் செலவிட்டு வருகிறேன்.
நிறைய வலைப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். ஷங்கர் பாஸுவை பொறுத்தவரை, இப்போதைக்கு அணியின் நான் தான் பிட்டஸ்ட் பிளேயர். இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் இதனை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கருண்நாயர் இதை எதன் அடிப்படையில் வைத்து சொன்னார் என்பது தெரியவில்லை, ஒரு வேளை யோ யோ மதிப்பெண்ணை வைத்து சொன்னாரா என்பதும் தெரியவில்லை.