இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் பங்குபெற வேண்டும்

257

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி, இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் பங்குபெற வேண்டும் என முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

தற்போது ஓய்வில் இருக்கும் விக்கெட் கீப்பர் டோனி, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவார். இந்நிலையில், இந்த இடைவெளியில் டோனி உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நீங்கள் இந்தியாவிற்கு ஆட வேண்டும் என விரும்பினால், உங்கள் மாநிலத்துக்கும் ஆட வேண்டும் என நான் நம்புகிறேன், நிறைய மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதில்லை.

பி.சி.சி.ஐ இதை ஒரு தேர்வு செய்யும் முறையாக மாற்ற வேண்டும். இந்தியாவிற்கு ஆடவில்லை என்றால் மாநிலத்துக்கு தொடர்ந்து ஆட வேண்டும். அணித் தேர்வுக்கு முன் மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் ஆட வேண்டும். அப்போது தான் அந்த வீரர் எப்படி ஆடுகிறார் என கணிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டோனி உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என தேர்வுக்குழு தலைவர் பிரசாத், முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அவர் இதுவரை ரஞ்சி தொடர் உட்பட எந்த உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE