இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சித்தாராமன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை, இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவததற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை பதில் அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதத்தில் அவர் இலங்கைக்கு வரவிருந்தபோதும் பின்னர் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் எட்கா உடன்படிக்கை தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.