இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு இலங்கையில் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதன் ஒருகட்டமாக இன்று ஒன்றிணைந்த பொறியியலாளர் சங்கம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
மருதானை கோட்டை போன்ற பகுதிகளில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவுடனான இந்த உடன்படிக்கை மூலம் இலங்கையில் உள்ள பல்வேறு துறை சார் பணியாளர்கள் பாதிக்கப்படவிருப்பதாக அந்த துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.