இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா

226

 

 

நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு தற்போது பொலிவூட்டைக் கடந்து உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் அடுத்ததாக இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தை ஜோதிகா நடித்த ‘ஜுன் ஆர் ’என்ற தமிழ் படத்தை இயக்கிய இயக்குநர் ரேவதி வர்மா இயக்குகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே மேரி கோம் என்ற குத்து சண்டை வீராங்கனையில் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்து வெற்றிப் பெற்றவர் என்பதும், இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இரண்டாவது விளையாட்டு வீராங்கனையின் வரலாற்று படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்

SHARE