இந்தியாவின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் “சமுத்ரா பெரேதார்” என்றகப்பலே இலங்கைக்கு வந்துள்ளது.
இந்தக் கப்பல் நேற்றும் இன்றும் முறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
கொழும்பில் தரித்திருக்கும் இரண்டு நாட்களிலும் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்குசொந்தமான இந்த கப்பலின் அதிகாரிகள், இலங்கையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுடன்பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.