இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்!

340

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுழற்சி அடிப்படையில் இந்த முறை தலைவர் பதவி கிழக்கு மண்டலத்திற்குரியது. பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யான அனுராக் தாகூருக்கு கிழக்கு மண்டலமான பெங்கால், அசாம், ஜார்கண்ட், திரிபுரா மற்றும் தேசிய கிரிக்கெட் கிளப் ஆகிய உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது.

இதன் மூலம் 41 வயதான அனுராக் தாகூர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற இருக்கிறார்.

அனுராக் தாகூர் தலைவரானதும், காலியாகும் செயலாளர் பதவிக்கு மராட்டிய கிரிக்கெட் சங்க தலைவர் அஜய் ஷிர்கே நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

SHARE