இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா?

211

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா இழக்காது என தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் திகதி துவங்கவுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இந்தத் தொடரில் 5-0 என இங்கிலாந்து வென்றாலும், இந்தியாவின் புள்ளி 112ஆகக் குறையும். அதனால், தொடர்ந்து முதலிடத்திலேயே இந்தியா இருக்கும்.

தற்போது 112 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்கா. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.

தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் அல்லது டிரா செய்தாலும், அந்த அணி 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE