இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி: ரகசிய ஆலோசனை நடத்தும் சீனிவாசன்

396

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்றுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் இன்று என்.சீனிவாசன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20 ஆம் திகதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சேர்மனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான தமிழகத்தை சேர்ந்த என்.சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் இன்று ரகசிய ஆலோசனை நடத்துகிறார்.

இதில் 8 முதல் 9 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக தலைவர் பதவிக்கு தகுதியானவரை அடையாளம் காண என்.சீனிவாசன் தீவிரம் காட்டி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

SHARE