இன்று இந்த வழக்கு மீதான விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 4ஆம் திகதி மேற்படி இந்தியர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சந்தேக நபர்களிடம் இருந்து போலி ஆவணங்கள்,போலி முத்திரைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொழும்புக் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான் எதிர்வரும் 18ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாற உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.