இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டும் – ராம்தாஸ்

335

இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டுமென பாட்டதாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ.ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மாநிலத்திற்கு வெளியேற தொலைகல்வி நிலையங்களை நடாத்தக் கூடாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பல்கலைக்கழகங்களின் தொலைகல்வி பட்ட கற்கை நெறிகளின் ஊடாக இலங்கை தமிழ் மாணவர்கள் நன்மைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக மாநில பல்கலைக்கழகங்கள் இலங்கையில் கற்கை நெறிகளை நடாத்த அனுமதிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE