இந்திய பிரஜைக்கு கனடாவில் கிடைத்த உயர் அதிகாரம்

163

இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ரானா சர்க்கார் கனடாவின் தூதரக தலைமை அதிகாரியாக அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2009 – 2013 ஆம் வரை கனடா, இந்தியா வணிக கவுன்சிலின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள மெக்சிகோ, அமெரிக்கா உடனான வர்த்தக உடன்படிக்கை மறுபரிசீலனையில் கலந்து கொள்ளும் 13 பேர் கொண்ட குழு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இவரை குறித்த பதவியில் நியமித்ததன் மூலம் கனடாவிற்கு அதிக அளவிலான முதலீட்டை பெற முடியும் என நம்புவதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரானா சர்க்காரை தொடர்ந்து கனடா நாட்டின் அமைச்சர்களாக நான்கு இந்திய வம்சாவளியினர் பதியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE