இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக மலேசிய வாழ் தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம்

174

இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தோனேசியாவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த மோடி அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார்.

அதை தொடர்ந்து மலேசியாவுக்கு சென்ற மோடி அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே மோடியின் வருகை குறித்து அறிந்த மலேசிய வாழ் தமிழ்மக்கள், ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஸ்டெர்லைட்டை தடை செய், தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடி எங்கள் எதிரி உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கரகோஷம் எழுப்பினார்கள்.

SHARE