இந்திய புலனாய்வுப் பிரிவினர் வடக்கின் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கின்றனர்

299

இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வடக்கின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அனைத்து நாடுகளையும் ஒரே விதமாக பார்ப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும், இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவார்கள் என கருதிவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிய வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். எந்த இனத்தை எந்த மதத்தைச் சேர்ந்தவர் என கருதாது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
1989ம் ஆண்டு தமது சகோதரர் ஒருவர் காணாமல் போனதாகவும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE