இந்தியாவின் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள பிரதான பாதை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரையிலும் , கொழும்பு ஊடாக மன்னாரில் இருந்து குருநாகல் வரையிலும், திருகோணமலை ஊடாக மன்னாரில் இருந்து வவுனியா வரையிலுமான பாதை அமைப்பது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாதை அமைப்பது தொடர்பில் தொழிநுட்ப உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பாதை அபிவிருத்தி தொழிநுட்பத்திற்கான கட்டணம் மிகக் குறைவானதே என இந்தியாவின் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.