இந்திய மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சபை முற்றுகை!

263

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று வடமாகாண சபையை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

இதன் காரணமாக அண்மைய நாட்களில் பல இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது.

இது தொடர்பாக வடபகுதி மீனவர்களின் ஆலோசனையை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE