இந்திய மீனவர்களுக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது! பிரதமர்

223

ranil_4_0

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என அண்மையில் செய்திகள் வெளியாகின.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது பாரிய சவாலாக அமைந்துள்ளது.

அத்துடன், இந்திய மீனவர்களின் நடவடிக்கையின் காரணமாக வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், அத்து மீறிய இந்திய மீனவர்களின் படகுகளை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் மீளவும் ஒப்படைக்காது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்டமூலத்தின் அடிப்படையில், அத்துமீறி மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக ஒன்றரை மில்லியன் ரூபா முதல் 15 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE