இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, நேற்று மீண்டும் உத்தரவிட்டார்.
இந்தியாவின் தமிழ்நாடு, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 29 பேரும் கடந்த மாதம் 29ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 31ஆம் திகதி இவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்ததுடன் பிரதம நீதி அரசரின் அறிக்கை பெறப்படாமையால் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.