இந்திய மீனவர்கள் நால்வர் கைது

261
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு பிரிவினர் யாழ். காரைநகருக்கு மேற்கு திசையில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்திய மீனவர்களின் படகு ஒன்றையும் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அவர்களின் படகுடன் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை மீன்பிடி, நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

SHARE