இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை! மறுக்கும் இலங்கை கடற்படை

366

இந்திய மீனவர்களை தாக்கியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கடற்படையினர் ஒருபோதும் எல்லைத்தாண்டிய செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய மீனவர்களை மூவரை, இலங்கை கடற்படையினர் தாக்கினர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதன்காரணமாக சுமார் 500 படகுகளில் தொழிலுக்கு சென்ற இந்திய மீனவர்கள் தொழிலை கைவிட்டு கரைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் இந்தத் தகவலை இலங்கையின் கடற்படையினர் மறுத்துள்ளனர்.

SHARE