இந்திய வீரர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் இவர் தான் டாப்

537

அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்கள் பட்டியலில் டோனியை பின்னுக்கு தள்ளினார் கோஹ்லி.

பிசிசிஐ அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் இருமடங்காக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதனால் ஒரு போட்டியில் 7 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு 15 லட்சமும், 3.5 லட்சம் பெற்றவர்களுக்கு 7 லட்சமும் அளிக்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பெறும் சம்பளவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து இந்திய வீரர்களுக்கு ரீடெயனர் சம்பளம், ஒரு நாள் போட்டிக்கான சம்பளம், டி20 போட்டிக்கான சம்பளம், சிறந்த வீரர் என்பதற்கான சம்பளம் மற்றும் A, B, C என மூன்று விதங்களாக சம்பளங்களை தருகிறது.

இதில் ஆண்டு ஒன்றுக்கு A ரீடெய்ன்ருக்கு 1 கோடி எனவும், B பிரிவைச் சேர்ந்தவருக்கு 50 லட்சம் எனவும், C பிரிவைச் சேர்ந்தவருக்கு 25 லட்சம் என பிரித்து தருவதாக கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்கள் பெறும் சம்பள விபரங்களில் இந்திய அணியின் டெஸ்ட் அணி தலைவர் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த படியாக டோனி உள்ளார்.

டோனி 8 ஒருநாள் போட்டிகளுக்கு 32 லட்சம் ரூபாயும், 22 டி20 போட்டிகளுக்கு 42 லட்சம் ரூபாயும் பெறுவதாக கூறப்படுகிறது.

அஸ்வின் 2 ஒரு நாள் போட்டிகளுக்கு 8 லட்சம் ரூபாயும், 17 டி 20 போட்டிகளுக்கு 34 லட்சம் ரூபாயும் பெறுகிறார்.

ரகானே 4 ஒரு நாள் போட்டிகளுக்கும் 16 லட்சம் ரூபாயும், 7 டி 20 போட்டிகளுக்கு 14 லட்சம் ரூபாயும் பெறுகிறார்.

ரோகித் சர்மா 5 ஒரு நாள் போட்டிகளுக்கு 10 லட்சம் ரூபாயும், 18 டி 20 போட்டிகளுக்கு 36 லட்சம் ரூபாயும் பெறுகிறார்.

இதே போன்று மற்ற வீரர்களுக்கும் அவர்களின் பிரிவுக்கு ஏற்றார் போல் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

SHARE