இந்திய ஹொக்கி ஜாம்பவான் சாகித் மரணம்!

263

625.400.560.350.160.300.053.800.748.160.70 (3)

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது சாகித் இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.

முகமது சாகித் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரியானாவில் குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரின் மருத்துவ செலவுக்காக மத்திய விளையாட்டு துறையும் ரூ. 10 லட்சம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இன்று மரணமடைந்தார்.

56 வயதான முகமது சாகித் கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்றிடுந்தார். மத்திய அரசின் அர்ஜூனா மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE