இந்து கோயிலுக்கு மேலே ஏறி புகைப்படம் எடுக்க முயன்ற இங்கிலாந்து பயணி தவறி விழுந்து பலி..!! இங்கிலாந்து நாட்டை

236

ச் சேர்ந்த ரோஜர் ஸ்டோஸ்பரி (56) மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் நாட்டிளிருந்து சர்வதேச சுற்றுலாவை தொடங்கியுள்ளனர். இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தளங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

பயணத்தின் இறுதி கட்டமாக இந்தியாவின் பழமையை தெரிந்து கொள்ளவும், இந்தியாவின் கட்டிடக் கலையை ரசிக்கவும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். முதல் கட்டமாக வட மாநிலங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ எடுப்பதற்காக மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஆர்ச்சா என்ற நகரத்தில் இருக்கும் லக்ஷ்மி நாராயனண் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் கட்டிடங்களை தான் எடுக்கும் ஆவணம் படம் ஒன்றிற்காக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கோவிலின் மேல் பகுதியில் இருந்து, அந்த நகரம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார். அப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது கீழே பார்க்காமல் அப்படியே நடந்த அவர் கால் தவறி மாடியில் இருந்து 30 மீட்டர் கீழே விழுந்திருக்கிறார்.

இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மனைவி அந்த இடத்திலேயே மயங்கி இருக்கிறார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

SHARE