இந்த அறிகுறிகள் உங்கள் உடலில் தென்படுகிறதா? கவனமா இருங்க!

183

ஒருவரது உடலினுள் உள்ள பிரச்சனைகள், குறிப்பிட்ட சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படும். எப்போதுமே உடல் தனக்கு தேவையானதை ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும்.

உதாரணமாக, பசி ஏற்படுகிறது என்றால், உடலின் சீரான இயக்கத்திற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. ஆகவே சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தவே பசி ஏற்படுகிறது.

இங்கு நம் உடலினுள் உள்ள பிரச்சனைகளை உடல் நமக்கு எந்த அறிகுறிகளின் மூலம் உணர்த்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

  • கர்ப்பமாக இல்லாமல், புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக உள்ளதா அப்படியெனில், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
  • இறைச்சிகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், உங்கள் உடல் புரோட்டீனை அதிகம் கேட்கிறது என்று அர்த்தம். சைவ பிரியர்களாக இருந்தால், தாவர வகை புரோட்டீனை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
  • சர்க்கரை உணவுகளின் மீது ஆவல் அதிகம் உள்ளதா, ஏன் என்று தெரியுமா, வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்த தான். அதாவது நீங்கள் அடிமையாகிவிட்டீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.
  • உங்களால் தூங்க முடியவில்லையா? கால்களில் அடிக்கடி தசைப் பிடிப்புகள் ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் மக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இக்குறைபாட்டைப் போக்க வாழைப்பழம், நட்ஸ், பச்சை இலைக்காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.
  • ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும்.
  • உப்புள்ள உணவுகளின் மீது நாட்டம் அதிகரிப்பதற்கு, உடலின் உட்பகுதியில் காயங்கள் அல்லது தொற்றுகள் இருப்பதால் தான்.
SHARE