இந்த ஆண்டு கடலில் மூழ்கி பலியான அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

245

2016ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 7,189 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகள் தொடர்பான சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 1.5 மில்லியன் அகதிகள் ஐரோப்பாவில் தஞ்மடைந்துள்ளனர்.

இதில் இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் 7,189 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் அல்லது காணாமல் போய் உள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 20 பேர் என்ற கணக்கில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வருடம் முழுவதும் நிறைவடையாத நிலையில் இந்த உயிழப்பானது மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் மத்திய தரைக்கடல் பகுதியில் 3,771 அகதிகள் உயிரிழந்ததாக இந்த நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

refugee-crisis-981x500

SHARE