சசிகுமாரின் கம்பெனி தயாரிப்பு நிர்வாகத்தை நிர்வகித்து வந்த அசோக் குமாரின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செய்தனர்.
தற்கொலை கடிதத்தில் அவர் ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஃபைனான்சியரால் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஷ் கடன் தொந்தரவால் இறந்து போனார். இந்நிலையில் பலரும் அவரால் பாதிக்கப்பட்டுள்ளது ஒவ்வொன்றாக வெளிவருகிறது.
இந்நிலையில் அப்போது மிக பிரபல நடிகைகளான ரம்பா, தேவையானி ஆகியோர் இதே ஃபைனான்சியர் மூலம் சொந்தமாக படம் எடுத்து பின் சிதர்வதைக்கு ஆளானார்களாம்.